ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது.
ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை.
அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, ஒரு வார கால அவகாசம் தருமாறு தேரர் கேட்டிருந்தார்.
அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைந்தது.
இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுந்தது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமே.