ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) பற்றிய சமீபத்திய தகவல்களின்படி, Apple நிறுவனம் தனது தொலைபேசி வரிசையின் நிறத் தெரிவுகளை மீண்டும் சீரமைக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, இந்தப் புதிய நிறத் தெரிவுகளிலிருந்து, தற்போதுள்ள (Cosmic Orange) நிறம் நீக்கப்பட வாய்ப்புள்ளது.


அதற்குப் பதிலாக, பல புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்த Apple எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.


இதன்படி, iPhone 18 Pro தொடருக்காக Apple நிறுவனம் Coffee, ஊதா (Purple) மற்றும் Burgundy (மெரூன் நிறத்தை ஒத்த நிறம்) ஆகிய மூன்று புதிய நிறங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவலை Weibo தளத்தில் செயல்படும் பிரபல தகவல் வழங்குநரான “இன்ஸ்டன்ட் டிஜிட்டல்” (Instant Digital) என்பவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த புதிய தலைமுறை iPhone 18 Pro மாதிரியில் வழக்கமான கருப்பு (Black) நிறத் தெரிவும் மீண்டும் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அனுமானிக்கப்படுகிறது.

முன்னதாக, iPhone 17 Pro தொடரை Cosmic Orange நிறத்துடன் அறிமுகப்படுத்தி, Apple பெரும் கவனம் பெற்றிருந்தது.

இப்போது, புதிய தோற்ற அனுபவத்திற்காக நிறுவனம் தயாராக இருப்பதை இச்செயல் காட்டுவதாக பகுப்பாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐபோன் 18 ப்ரோவுக்காகப் பரிந்துரைக்கப்படும் Coffee நிறம் சிறப்பானதாகக் கருதப்படுவதற்குக் காரணம், Apple இதற்கு முன்பு ஒருபோதும் இத்தகைய நிறத்தில் iPhone ஒன்றை வெளியிட்டதில்லை என்பதுதான்.

இந்த வதந்திகள் உண்மையாக இருந்தால், அந்த புதிய Coffee நிறம், iPhone XS இன் தங்க நிறத்தையோ அல்லது iPhone 16 Pro தொடரின் Desert Titanium நிறத் தோற்றத்தையோ நினைவூட்டக்கூடும் என அறிக்கைகள் கூறுகின்றன.