யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
யானைக்கால் நோயைப் பொறுத்தவரை, ஒரு நோயாளி அறிகுறிகளுடன் வரும்போது, அவருக்கு நோய் ஏற்பட்டு 10, 15 அல்லது 20 வருடங்கள் கடந்துவிடுகின்றன.
வீதிகளில் காணும் கால்கள் வீங்கிய அல்லது விசேட உறுப்புகளில் வீக்கங்களுடன் இருக்கும் ஒரு நோயாளி, காலம் கடந்தே அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரவு நேரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் மேற்கொள்ளப்படும் விசேட இரத்தப் பரிசோதனைகள் மூலமே இந்த நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
