கொஸ்கம மற்றும் அவிசாவளைக்கு இடையில் புகையிரதமொன்று தடம் புரண்டதால், களனிவெளி புகையிரத மார்க்கத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது, அந்த புகையிரத மார்க்கத்தில் கொஸ்கம நிலையம் வரை மட்டுமே புகையிரதம் இயக்கப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், புகையிரதத்தை மீள தடமேற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது