பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டது.

குறித்த பகுதியில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்போது, 82 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு, பண்டாரவளை நீதிவான் முன்னிலையில் நேற்று (02 )) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இவர்களில், குறித்த தொகை கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏனைய 6 பேரும் பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.