திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதவைப்படகு சேவை இன்று (27) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் இயக்கப்படுகின்ற குறித்த படகுச் சேவையானது கடந்த 2021ஆம் நவம்பர் மாதம் படகு விபத்துக்குள்ளாகி பாடசாலைச் சிறுவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து படகுச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது 45 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட புதிய படகு குறித்த பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.