நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொலிரூட் தமிழ் வித்தியாலம் மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களை கௌரவிக்கும் வகையில் மலையக மக்கள் மன்றம் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி சிறப்பான பரிசளிப்பு விழாவை ஏற்பாடு செய்தது.
இந்த விழாவில் 2025 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களும், 2025 ஆம் ஆண்டு கா.பொ.த. (சா/த) தரப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் தங்களது கல்விச் சாதனைகளுக்காக பரிசுகளை பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்விற்கான முழுமையான நன்கொடையை திருமதி அகிலா ராஜேஷ் அவர்கள் வழங்கி இருந்தார்.
விழா சிறப்பாக நடைபெறுவதற்காக இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்கள் தங்களது முழுமையான ஆதரவினையும் வழங்கினர்.
மேலும், மலையக மக்கள் மன்றத்தின் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்று மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
இந்த விழா விழித்திரை ஊடக அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.