மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர்.

குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.