சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை வைத்திருந்த நபர், மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கிருலப்பனை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து, 950 கிலோகிராம் மஞ்சள் மற்றும் 2,562 சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
18 Oct 2025 | 7:16 AM
10 views
மஞ்சள் மற்றும் கிரீம்களுடன் ஒருவர் கைது
MI
mithu mithu
in உள்ளூர் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் செய்திகள்
மட்டக்களப்பு குருக்கள்மட அகழ்வாராய்ச்சி முடிவு: எவ்வித தடயங்களும் இன்றி நிறைவு!
04 Apr 2026 · 10:30 AM
உள்ளூர் செய்திகள்
“விண்ணப்பக் காலம் முடிந்தது!” – மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சர் அதிரடி உத்தரவு.
04 Apr 2026 · 9:34 AM