BREAKING NEWS

மைக்கேல் ஜாக்சன் பயோபிக் விமர்சனம்: ஜாபர் ஜாக்சன் மிரட்டலா? சொதப்பலா?

KA
kavisha tamilini in சினிமா
Report
மைக்கேல் ஜாக்சன் பயோபிக் விமர்சனம்: ஜாபர் ஜாக்சன் மிரட்டலா? சொதப்பலா?

கதைக்களம்: உலகமே தன் காலடியில் கிடக்க வேண்டும் என நினைத்த ஒரு கருப்பினச் சிறுவன், தன் இசையாலும் நடனத்தாலும் இந்த பூமியையே கட்டிப்போட்டதுதான் ‘மைக்கேல்’ படத்தின் ஒட்டுமொத்தக் கதை. 90-களின் தலைமுறையினர் கொண்டாடித் தீர்த்த மைக்கேல் ஜாக்சனின் வலிகளும், அவமானங்களும், அதையும் தாண்டி அவர் அடைந்த உச்சாணிக் கிளைகளும் இயக்குனர் அன்டோயின் ஃபுகுவாவின் பார்வையில் திரையில் விரிகின்றன.

நடிப்பு: ஜாபர் ஜாக்சனின் ‘அவுட் ஆப் தி பாக்ஸ்’ ஆட்டம்! மைக்கேல் ஜாக்சனாக நடித்திருக்கும் ஜாபர் ஜாக்சன் (மைக்கேலின் உறவினர்), உருவ ஒற்றுமையால் மட்டும் கவரவில்லை. மைக்கேலின் அசைவுகள், அந்த மின்னல் வேக நடனம், மென்மையான பேச்சு என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக, சிறுவயது மைக்கேலாக வரும் சிறுவனின் நடிப்பு ஆச்சரியத்தின் உச்சத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது. அந்தச் சிறுவனின் உழைப்பு 100% தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது.

படம் எப்படி இருக்கிறது? இசை எப்படி உருவாகிறது, ஒரு பாடலின் வரியும் மெட்டும் எப்படி ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது என்பதை இயக்குநர் அழகாகப் பதிவு செய்துள்ளார். ஆனால், ஒரு ஜாம்பவானின் வாழ்க்கையைச் சொல்ல வெறும் 2 மணி நேரம் 15 நிமிடம் போதுமா? என்பதுதான் பெரும் கேள்வி.

பிளஸ் பாயிண்ட்ஸ்:

  • பெர்ஃபாமன்ஸ்: ஜாபர் ஜாக்சன் மற்றும் சிறுவயது மைக்கேல் கதாபாத்திரங்களின் நடிப்பு.
  • தொழில்நுட்பம்: கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்லும் ஒளிப்பதிவு மற்றும் உலகத்தரம் வாய்ந்த சவுண்ட் டிசைன்.
  • இசை மாயம்: படம் முடியும் போது வரும் அந்த ஹிட் பாடல்கள் தியேட்டரையே ஒரு நேரடி இசை கச்சேரி (Concert) போல மாற்றிவிடுகின்றன.

மைனஸ் பாயிண்ட்ஸ்:

  • நீளம்: 3 மணி நேரமாக விரிவாகச் சொல்லப்பட வேண்டிய கதையைச் சுருக்கியது ஒரு ஏமாற்றம்.
  • திரைக்கதை: ரசிகர்களுக்கு விருந்தாக இருந்தாலும், மைக்கேலைத் தெரியாத சாமானியர்களுக்கு ஒரு முழுமையான பயோகிராபியைப் பார்த்த திருப்தியைத் தரவில்லை.