இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

டி20 தொடர்

முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர் முடிந்தவுடன் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

சூர்யகுமார் யாதவ் அணித்தலைவராகவும் சுப்மன் கில் துணைஅணித்தலைவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஒருநாள் தொடர் 

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அறிவிக்கப்பட்டது. இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை தலைவராக ஷ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.மேலும் இந்த ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை.

மேலும் கீப்பராக கேஎல் ராகுலும் மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜூரலும் இடம் பெற்றுள்ளார்.

இந்த அணியில் ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார்.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி

சுப்மன்கில் (c), ரோகித் சர்மா, விராட் கோலி,ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல், ஜெய்ஸ்வால், நிதிஷ் ரெட்டி, வோசிங்டன் சுந்தர், குல்தீப், ஹர்ஷித், சிராஜ், அர்ஷ்தீப் மற்றும் பிரஷித் கிருஷ்ணா