வெலிகம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தற்போது தேடப்பட்டு வரும் நபரை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் வெலிகம பிரதேச சபை தலைவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய துப்பாக்கிதாரியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கொழும்பு கோட்டை பகுதியில் நபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நடமாடுவதாக கிடைத்த தகவலுக்கமைய அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பஸ்கள் மற்றும் ரயில் நிலையத்தில் அதிகளவான பொலிஸார் வரவழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.