அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் இடம்பெறும் 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் இடுப்பு எலும்பில் ஏற்ப்பட்ட முறிவினையடுத்து உடலுக்குள் ஏற்ப்பட்ட இரத்தக் கசிவு காரணமாக இந்திய அணி வீரர் ஸ்ரெயாஸ் ஐயர் சிட்னி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் எலெக்ஸ் கேரியின் பந்தை பிடியெடுப்பதற்காக முயற்சித்த போதே அவர் குறித்த நிலைக்கு முகம்கொடுத்துள்ளார்.