பிறந்தநாள் வைபவத்திற்கு வாங்கி சென்ற கேக்கில் இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது.

மஸ்கெலியா நகரில் உள்ள வோன்டர் சுப்பர் ஸ்டார் வெதுப்பகத்தில் வாங்கிய ஜஸ்சிங் கேக்கிலே இறந்த நிலையில் பல்லி காணப்பட்டுள்ளது .

நேற்றைய தினம் (26)புரவுன்லோ தோட்டத்தில் வசிக்கும் கண்ணதாசன் சாலினி பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே வாங்கி சென்ற நிலையிலே கேக்கில் பல்லி இறந்த நிலையில் இருந்ததை கண்டு பீதி அடைந்த நிலையில் 5 வயது ஜனசீகா என்ற பெண் குழந்தையும் 3 வயது ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு புகார் செய்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது .