இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 3,000 கோடி இலங்கை ரூபா) கடனுதவித் தொகுப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் தொகை, நாட்டின் தேசிய சுற்றுலா கொள்கையுடன் இணைந்து, கொள்கை மறுசீரமைப்புகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த நிதியுதவியானது, நிலையான சுற்றுலாத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 70 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனாகவும், 30 மில்லியன் அமெரிக்க டொலர் வழக்கமான கடனாகவும் வழங்கப்படுகிறது.