கடலில் மூழ்கி நான்கு பெண்கள் உயிரிழப்பு இலங்கை பெண் உட்பட நான்கு பெண்கள் பலத்த அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தமிழகத்தில் பதிவாகியுள்ளது.
எண்ணூர் அருகே கடலில் இந்த சம்பவம் நேற்று ஏற்பட்டபோது 17 முதல் 30 வயதுக்குட்பட்ட நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அலையால் அடித்துச்செல்லப்பட்ட பின்னர் குறித்த பெண்களின் உடல்கள் அனைத்தும் அதே இடத்தில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிக்கும் தேவகி செல்வம் என்ற பெண்ணும் தமிழகத்தை சேர்ந்த ஏனைய மூன்று பேருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்