50 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதிகொண்ட கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைதாகியுள்ளார். தணமல்வில ஹம்பேகமுவ பகுதியில் பொலிசார் சுற்றிவளைப்பு நடத்தியுள்ளனர்.
இதன்போது அங்கு வளர்க்கப்பட்டிருந்த கஞ்சா செடிகள் அடையாளம் காணப்பட்டன.அவற்றை முற்றாக தீயிட்டு அழிப்பதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்தனர். சந்தேக நபரை வெல்லவாய நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.