all the beauty of the forests

இலங்கையின் வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 1995 என்ற புதிய அவசரத் தொலைபேசி இலக்கம் ஊடாக வனப் பகுதிகள் அல்லது சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் எந்தவொரு பாதிப்பு குறித்தும் தகவல்களை வழங்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.