50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் ஐயப்பன் யாத்திரையை அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரையாக இலங்கை அரசு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் .

உலகில் இந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே நாடு இலங்கைதான்,ஐயப்பன் வழிபாட்டை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வழிபாட்டு சேவையாக மாற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் விழா பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்றது.

சப்ரகமுவ மாகாண ஐயப்பன் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இரக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கலாச்சார நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.