மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று(02) உரிமம் இல்லாமல் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.