கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (04) நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முழுமையாக முடியும் வரை தடைசெய்யப்படும் என்று பரீட்சை ஆணையர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை இந்த மாதம் 10 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2,362 மையங்களில் இடம்பெற உள்ளது .

பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்கள் மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாகவும், அனுமதி அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் இன்று (03) முதல் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.