இன்றிரவு வானில் ‘சுப்பர் மூன்’ (Supermoon) எனப்படும் நிகழ்வு நிகழவுள்ளதாகவும், இது வழக்கமான முழு நிலவை விட அதிக பிரகாசமாகவும், பெரியதாகவும் காட்சியளிக்கும் என்றும் ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த சுப்பர் மூன் வழமையை விட சுமார் 14% பெரியதாகவும், சுமார் 30% அதிக பிரகாசத்துடனும் ஒளிரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திரனின் நீள்வட்டப் பாதை அதனை பூமிக்கு மிக அருகில் கொண்டு வரும்போது இத்தகைய நிகழ்வுகள் வருடத்திற்குப் பல முறை நிகழ்கின்றன.
இன்று இரவு சந்திரன் பூமிக்கு சுமார் 356,980 கி.மீ தொலைவில் இருக்கும். இன்று தெரியும் இந்த முழு நிலவு, இந்த வருடத்தின் மிகப் பெரிய சுப்பர் மூன் ஆகும். அத்துடன் இந்த சுப்பர் மூன் நிகழ்வு காரணமாகக் கடற்கரைப் பகுதிகளில் வழமையை விட உயரமான அலைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.