இயற்கை அனர்த்தங்களால் வசிப்பிடங்களை இழந்த 3,250 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் 2025-2027 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 1,400 புதிய வீட்டு அலகுகளை அமைத்து, பயனாளிக் குடும்பங்களை குடியேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவு 4,500 மில்லியன் ரூபாயாகுவதுடன், 2025 ஆம் ஆண்டில் 1,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் பதுளை, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, கொழும்பு, களுத்துறை, மாத்தறை மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் தகைமை பெற்றுள்ள 495 பயனாளிக் குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படாத எஞ்சிய குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக வெளிநாட்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மாத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.