மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நிறைவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் இன்று அறிவித்துள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் குறித்த மனு இன்று அழைக்கப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் குறித்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கை சினிமா