போலி நகையொன்றை அடகு வைக்க சென்ற நபரொருவர் கைதாகியுள்ளார்.கல்முனை பகுதியிலுள்ள அரச வங்கி ஒன்றிடமிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அடகு வைப்பதற்காக வருகை தந்த நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வங்கியின் ஊழியர் முகாமையாளருக்கு அறிவித்துள்ள நிலையில் கைது இடம்பெற்றுள்ளது.

கைதான சந்தேக நபர் குறித்த போலி நகையை கடற்கரை பகுதியில் கண்டெடுத்ததாகவும் பின்னர் கல்முனை நகர பகுதியில் உள்ள நகைக்கடையில் பெற்றுக்கொண்டதாகவும் முரணான பதில்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபரை கல்முனை நீதிவான் நீதிமன்றில் நேற்றையதினம் முன்னிலை படுத்திய போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா