மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று (26) காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்க பொறியாளர்கள் தெரிவித்தனர்.
மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மேலும் கனமழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் மீதமுள்ள வான்கதவுகள் திறக்கப்படும் என்பதால், நீர்த்தேக்க அணையின் கீழ் கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு பேரிடர் மேலாண்மைப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
இப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் செயிண்ட் கிளேர் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவு அதிகரித்துள்ளது.