இத்தாலிய ஆடம்பர விளையாட்டு வாகன உற்பத்தியாளர் ஃபெராரி (Ferrari), தனது முதல் முழுமையான மின்சார காரின் “Elettrica” தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
Elettrica–வின் சாசிஸ் (chassis), பேட்டரி, மற்றும் மின்சார இயந்திரங்கள் அனைத்தும் ஃபெராரியின் புதிய “e-building” தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டவை.
இது முழுக்க முழுக்க ஃபெராரியின் சொந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த சிற்றூந்து 530 கிலோமீட்டருக்கும் அதிகமான வரம்பைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
மின்மோட்டார் மற்றும் இயந்திர அதிர்வுகளைப் பயன்படுத்தி உண்மையான “ஃபெராரி சவுண்ட் அனுபவம்” உருவாக்கப்பட்டுள்ளது.
இது செயற்கை (fake) ஒலி அல்ல, உண்மையான இயந்திர ஒலியின் மின்சார பிரதிபலிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை குறைந்தது 500,000 யூரோக்கள் ($580,400) இருக்கும் என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த காரின் முழுமையான வடிவம் மற்றும் வடிவமைப்பு 2026ஆம் ஆண்டில் வெளியிடப்படும். அதே ஆண்டின் இறுதியில் வாகனங்கள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.