இலங்கையில் ஆண்டுதோறும் 1.6 மில்லியன் டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 70 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் என்றும் இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரியவந்தது.
கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ரத்னசிறி இன்று நாடாளுமன்ற அமர்வின்போது கேள்வி எழுப்பிய போதே இந்தத் தகவல் தெரியவந்தது.
ஆண்டுதோறும் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான விடயங்களைக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, இதன்போது முன்வைத்தார்.
ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் தயிர் சட்டிகளும், 15 மில்லியன் டன் லஞ்ச் ஷீட்களும், 20 மில்லியன் டன் பொலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனில் சுமார் 70 சதவீதம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ஆண்டுதோறும் அதிக அளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அவற்றைக் குறைப்பதில் அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகப் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.