பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டுக்குள் குறைந்தபட்ச தினசரி சம்பளம் ரூ. 1,750 வழங்கப்படும் என்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவிப்புக்கு, பெருந்தோட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

தற்போதுள்ள 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், மேலும் 350 ரூபாய் அதிகரிப்பது எந்தவொரு உறுதியான பொருளாதாரத் தர்க்கத்தையும் கொண்டிருக்கவில்லை என்று முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பள அதிகரிப்பு ஆண்டுக்கு கூடுதலாக ரூ. 13 பில்லியன் சுமையை ஏற்படுத்தும் என்று நிறுவனங்கள் மதிப்பிடுகின்றன.