தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஹட்டன் நகரில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று அவசர பரிசோதனையை மேற்கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாக தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் பானங்களை வழங்குவதையும், பண்டிகைக் காலத்தில் சுத்தமாக உற்பத்தி செய்யப்பட்ட பேக்கரி பொருட்களை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு,ஹட்டனில் உள்ள பேக்கரிகள் மற்றும் உணவகங்கள் பொது சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டன .
அம்பகமுவ, மஸ்கெலியா மற்றும் பகவந்தலாவ மருத்துவ அதிகாரிகள் அலுவலகங்களைச் சேர்ந்த பொது சுகாதார ஆய்வாளர்கள், ஹட்டன் டிக்கோயா நகரசபை பொது சுகாதார ஆய்வாளரின் ஆதரவுடன் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி எஸ். சந்திர ராஜன் கூறுகையில், கிட்டத்தட்ட 50 கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, சுகாதாரமற்ற முறையில் பேக்கரிகள் மற்றும் உணவகங்களை நடத்தி வந்த ஏராளமான கடை உரிமையாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
குறைபாடுகளை நிவர்த்தி செய்ய சில உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.