2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை இன்று (19) ஹட்டனில் மிகுந்த விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.பின்னர் ஆலயத்திலிருந்து மல்லியப்பு சந்திவரை பேரணி ஒன்று நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து தனியார் மண்டபத்தில் தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் நடைபெற்றன.

கோலாட்டம், காமன் கூத்து, அருச்சுனதவசு போன்ற பாரம்பரிய கலை நிகழ்வுகள் மக்கள் மனதை கவர்ந்தன.இது ஒற்றுமையும் கலாசார வளமும் பிரதிபலிக்கும் ஒரு அருமையான விழாவாக அமைந்தது.#Hatton #Deepavali2025 #TamilNews #SriLanka #HinduCulture #VizhithThirai #FestivalOfLights