காலி மாவட்டம் அக்மீமன பகுதியில், வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் குஷ் ரக போதைப்பொருளை (Cannabis Kush) பயிரிட்டு வந்த பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை காலி மாவட்ட குற்றப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.போலிஸார் கூறுவதில், சந்தேகநபர் வீட்டின் இரண்டு அறைகளில் போதை செடிகளை வளர்த்துள்ளார்.
அந்த போதைப்பொருள், நாட்டிற்கு வருகைதரும் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்யும் நோக்கத்துடன் பயிரிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும், அந்த வீடு கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது என்றும், சந்தேகநபர் மாத வாடகையாக ரூ.1.5 இலட்சம் செலுத்தி அந்த வீட்டை எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், காலி மாவட்ட குற்றப்பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேரா முன்னெடுத்துள்ளார்.
#DrugBust #SriLankaNews #Galle #ForeignSuspect #Akmeemana #CannabisPlant #VizhithThirai #CrimeNews #PoliceAction