களனிவெளி ரயில் மார்க்கத்தின் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு கோட்டையிலிருந்து அவிஸ்ஸாவளை நோக்கி பயணித்த ரயிலொன்று கொஸ்கம மற்றும் அவிஸ்ஸவாளை ரயில் நிலையத்திற்கிடையில் தடம்புரண்டது.
நிலவும் சீரற்ற வானிலையால் முறிந்து விழுந்த மரம் மற்றும் மண்மேடு ரயில் மார்க்கத்தில் காணப்பட்டமையே இதற்கு காரணமாகும்.இந்நிலையில் நிலைமையை சீர் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளதால் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.