நுவரெலியா- கிரகறி வாவி பகுதியில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்றை பொலிசார் சுற்றிவளைத்துள்ளனர்.
இதன்போது 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வரை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்று இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதை பொருள் , கஞ்சா, ஐஸ், தீர்வை செலுத்தபடாமல் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகள், போதைப்பொருள் மாத்திரைகள் மற்றும் மாவா உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்களைக் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்கள் 18 முதல் 35 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் கம்பஹா, மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லம்பிட்டிய, மருதானை, கிராண்ட்பாஸ், பெலியகொட மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.