பிரேசிலின் பெர்னாம்புகோ மாகாணம் ப்ரூமாடோ நகரத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் 30 பேரை ஏற்றி சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சலோவா நகர் அருகே சென்றபோது குறித்த பஸ் திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாதையோரமிருந்த மணல்மேட்டில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது.
அத்துடன், படுகாயம் அடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.