துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர உயிரிழந்துள்ளர்.
இன்று அதிகாலை லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லசந்த விக்ரமசேக, மாத்தறை பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பிரதேச சபை வளாகத்திற்குள் வந்துள்ளனர்.அவர்கள் “கடிதத்தில் கையெழுத்திட வந்ததாக” கூறி, தலைவரை அணுகி, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமசேகர பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.