2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.