கோழிப் பண்ணையிலிருந்து ரூ.223,200 பெறுமதியுள்ள 186 கோழிகளைத் திருடியதற்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸ் தெரிவித்துள்ளது.
ருஹுணுகம, கஜுவத்த பகுதியைச் சேர்ந்த 18-32 வயதுக்குட்பட்ட நால்வரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட 186 கோழிகளில் 90 கோழிகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் முன்னெடுக்க கின்றனர்.