இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்து அண்மையில் வெளியாகிய வர்த்தமானிக்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு நடுத்தர அளவிலான ஆலை உரிமையாளர்களுக்கு பாரிய சாவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விவசாய அமைப்புகளும் ஆலை உரிமையாளர்களும் அரசாங்கத்தின் குறித்த திட்டத்துக்கு தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

நாட்டில் ஏற்கனவே நாடு மற்றும் பச்சை அரிசி உபரியாக இருக்கும்போது இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிடுவது சிக்கலாக உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.