ஊழல் நிறைந்த டெண்டர் ஊடாக தரம் குறைந்த நிலக்கரியை நாட்டுக்கு இறக்குமதி செய்து நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் டெண்டர் தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியுடன் எந்தவொரு தொலைக்காட்சி ஊடகத்திலும் விவாதிக்க தான் தயார் எனவும், இந்த கொடுக்கல் வாங்கல் முற்றிலும் ஊழல் நிறைந்தது என்பதை தான் நிரூபிப்பேன் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சிக்காலத்தின் முதல் வாரத்திலிருந்தே ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், பாரியளவிலான நிலக்கரி ஊழல் குறித்த விபரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.
பொதுவாக ஏப்ரல் மாதம் கோரப்பட வேண்டிய நிலக்கரி டெண்டரை, செப்டம்பர் மாதம் வரை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட முதல் இரண்டு நிலக்கரி கப்பல்களின் தரம் (Calorific value) 5600-5800 இற்கு இடைப்பட்ட மட்டத்திலேயே காணப்படுவது லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நிலக்கரி டெண்டர் வழிகாட்டல்களின்படி, இந்தத் தரம் குறைந்தபட்சம் 5900 ஆக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை சினிமா