இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தின் கூரை வழியாக உள்நுழைந்தே திருடர்கள் 6 உண்டியலை உடைத்து அதிலிருந்த இருந்த பணத்தைத் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
ஆலயத்தில் உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்தில் பிரதான காரியாலயத்திலிருந்த சி.சி.டி.வி. கெமராவின் முழு இணைப்பையும் துண்டித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா தடயவியல் பொலிசார் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.
மேலும் ஆலயத்தின் அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கண்காணிப்பு கெமராக்களை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.