நுவரெலியா ரெலியா கிரெகரி ஏரியில் தரையிறங்கும் போது கடந்த (07) ஆம் திகதி விபத்துக்குள்ளான தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ‘செஸ்னா’ (Cessna) ரக இலகு ரக விமானத்தை மீட்கும் பணிகள் நேற்று (08) முன்னெடுக்கப்பட்டன. சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் அதிகாரிகளின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, அதனை மீட்பதற்காக தொழில்முறை சுழியோடிகளின் (Master Divers) சேவையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், நුවரெலியா பொலிஸ் உயிர் காக்கும் பிரிவு, விமானப்படை மற்றும் ஏரி படகோட்டிகளின் உதவியுடன் மோசமான வானிலைக்கு மத்தியிலும் விமானத்தை மீட்கப் பலமுறை முயன்றும் அது பலனளிக்கவில்லை. இந்த விபத்தினால் விமானத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்து நුවரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு விமான ஓட்டிகளும் (08) ஆம் திகதி சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.