இலங்கைக்கு வந்த சோதனை : உலக தரவரிசையில் தடுமாற்றம்
2025 ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை கடவுச்சீட்டு சரிவை சந்தித்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டு, கடந்த ஆண்டை விட 6 இடங்கள் பின்தங்கி 98 ஆவது இடத்துக்கு சென்றுள்ளது. ஆண்டின் தொடக்கத்தில், பல்வேறு காரணிகளால் இலங்கை கடவுச்சீட்டு பின்தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
தீபாவளிக்கு மறுதினம் பாடசாலைகளுக்கு விடுமுறை
தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சபரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் சபரகமுவ…
காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவையில் தடையில்லை ஐக்
காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது!‘பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது’ என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான…
அமுலுக்கு வந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்
ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இன்று மாலை 6 மணி (IST) முதல் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தார். பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள் மற்றும் வற்புறுத்தலின் பேரில் குறித்த போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
மண்சரிவு எச்சரிக்கை அபாயம்-மக்களே அவதானம்!
நாட்டின் பல மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலி, கம்பஹா, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மண்ணில் கால் பதித்தார் இஷாரா செவ்வந்தி
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வீரசிங்க பினிபுர தேவகே இஷாரா செவ்வந்தி, ஜீவதாசன் கனகராசா, தக்ஷி நந்தகுமார, தினேஷ் ஷ்யாமந்த, டி சில்வா கலுதார,…
இலங்கையில் அரசியல்வாதிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர் -சர்வதேச ஊடகம் குற்றச்சாட்டு
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நிறைவடைந்திருந்தாலும், இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகச் சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன்…
சம்பள உயர்வு திட்டத்தில் பொருளாதார தர்க்கம் இல்லை:பெருந்தோட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டுக்குள் குறைந்தபட்ச தினசரி சம்பளம் ரூ. 1,750 வழங்கப்படும் என்ற ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் அறிவிப்புக்கு, பெருந்தோட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. தற்போதுள்ள 1,350 ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பளத்துடன், மேலும் 350 ரூபாய்…
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக இஸ்ரேலுக்கு பணியாளர்களை அனுப்புவதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாகவே அவர் இன்று வாக்குமூலம் வழங்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிய நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்
18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள்…