மகளிர் உலகக் கிண்ணம் 2025- புள்ளிப்பட்டியலின் நிலை
கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனையடுத்து குறித்த இரு அணிக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. மழையின் குறுக்கீடு இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது. இலங்கை…
IMF தாயேவாக மாறியது ஸ்ரீலங்கா தாயே: சஜித் விமர்சனம்
இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தேவையான உரம் கிடைக்காத காரணத்தால், நாட்டின் தேயிலை உற்பத்தித் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மத்துகமவின் அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த…
தனியார் பேருந்தில் தீ விபத்து: 20 பேர் பலி
ராஜஸ்தானில் நேற்று தனியார் பேருந்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20 பேரின் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குளிர்சாதன படுக்கை வசதியுடன் கூடிய தனியார் பேருந்து, நேற்று 57 பயணிகளுடன் புறப்பட்டது. நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின்…
கடும் மழை – அனர்த்த எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை…
போதைப் பொருளை நிறுத்துவதே எங்கள் நோக்கம்
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். போதைப்பொருள் இல்லாத நாடு என்ற தலைப்பில் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே…
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினைப் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் 4 முறைப்பாடுகளும், வவுனியாவில் 4…
அஸ்வெசும பயனாளிகளின் நிதி மானியம்
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளிகளின் குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு குடும்பத்திற்கு ரூ.150,000 வரை வழங்கக்கூடிய இந்த மானியம், வணிக அல்லது வேலைவாய்ப்புத் திட்டங்கள் மூலம் வறிய…
போராட்டத்தை கைவிட்ட மின்சார சபை தொழிற்சங்கங்கள்
தாங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளன. தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எட்டப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும்…
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ETA கட்டாயம்
இலவச சுற்றுலா விசாவிற்கு தகுதியுடைய அனைத்து வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இலத்திரனியல் பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாகும். ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் இது கட்டாயமாகப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் கீழ் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுலா பயணிகள் வருகையை…
வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்
மட்டு வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்ப கேணி வயல் பிரதேசத்தில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்களை இன்று (14) நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்து அழித்ததாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த…