தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியை மீளப் பெற கட்சி தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மட்டக்களப்பு,…

3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘வெலியோய பிரியந்த’ மற்றும் ‘SF ஜகத்’ ஆகியோரின் நெருங்கிய உதவியாளர் ஒருவர், 3 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3…

ரணில், சஜித் இணைவதால் NPP ஆட்சிக்கு பாதிப்பு ஏற்படாது – நளிந்த ஜயதிஸ்ஸ

அத்துடன் இரு கட்சிகளின் கடந்த அரசியல் வரலாற்றையும் அவர் விமர்சித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இந்த நாட்டை அழித்த கட்சிகள். இந்த இரண்டு கட்சிகளும் இணைகின்றமையால் – புதிய…

நிலக்கரி நெருக்கடி

சர்ச்சைக்குரிய நிலக்கரி டெண்டரின் கீழ் பெறப்பட்ட நிலக்கரியின் தரம் தொடர்பான சிக்கல் நிறைந்த சூழ்நிலை காரணமாக, இந்த ஆண்டுக்கான தேவையான அளவு நிலக்கரியை அடுத்த ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இறக்குமதி செய்ய முடியாது என்றும், அப்படி நடந்தால், நாடு கடுமையான மின்சார…

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் மேலும் 03 பேரின் மரணங்கள் உறுதி

சேற்று இற்றைப்படுத்தப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அரச அதிபர்களினால் உறுதி செய்யப்பட்ட தரவுகளுக்கு அமைய, கண்டி, வவுனியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, டிட்வா சூறாவளியால்…

ஐசிசி ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறது – பங்களாதேஷ் விவகாரத்தில் அஃப்ரிடி காட்டம்!

ஐசிசி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆரம்பமாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் ஷஹித் அஃப்ரிடியின் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இந்தியாவில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட்…

மிரிஸ்ஸ துறைமுகத்தில் மேலும் ஒரு படகுடன் 5 பேர் கைது

திக்கோவிட்ட துறைமுகத்திற்கு போதைப்பொருட்களுடன் கொண்டு வரப்பட்ட இரண்டு படகுகளுக்கு, கடலில் வைத்து போதைப்பொருட்களை விநியோகித்ததாக சந்தேகிக்கப்படும் மற்றொரு படகு மிரிஸ்ஸ துறைமுகத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே திக்கோவிட்ட துறைமுகத்தில் சிக்கிய இரண்டு படகுகளுக்கும் போதைப்பொருட்களை கைமாற்றுவதற்கு…

பசிலன் கடல் அருகே படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான பசிலன்(Basilan) அருகே படகில் 350க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 144 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணிகள் நடைபெற்று…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மர்ம வாகனம் – காவல்துறையினர் தீவிர விசாரணை!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸாரால்…

உலக சந்தையில் வரலாற்று உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க டொலர்கள் வரை வரலாற்று ரீதியாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், தங்கத்தின் விலை…