மலையக மக்களை ஏமாற்றி உள்ளனர்: மனோ கணேசன் குற்றச்சாட்டு
மலையகத்தில் இந்திய அரசின் நன்கொடையுடன் செயல்படுத்தப்படும் 10,000 தனி வீட்டுத் திட்டத்தில், மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நிகழ்வு “காணி” என்ற…
தீவிரமாக பரவும் டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் – மக்களே அவதானம்!
பரவத்தொடங்கியுள்ளதால்இலங்கையில் தற்போது நிலவும் காலநிலை காரணமாக டெங்கு மற்றும் எலிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவத்தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் பிரசீலா சமரவீர வலியுறுத்தியுள்ளார். எனவே பொதுமக்கள் தங்கள் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம்…
திருத்தபடுமா மின்சார கட்டணம்!
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான அனைத்து ஆய்வுகளும் இன்று நிறைவு செய்யப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மின்சாரக் கட்டணம் தொடர்பான இறுதி முடிவு நாளை அறிவிக்கப்படும் என்று இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல் தொடர்பு பிரிவின் பணிப்பாளர்…
இன்று முதல் ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு
இன்று முதல் வட மாகாணத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு ஆட்சேபணை தெரிவித்து, இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.…
புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து மகளிர் அணி
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில், நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தைத்…
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லைகள் அடைப்பு
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான டோர்காம் மற்றும் சாமன் ஆகிய கடவைகளே மூடப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதல்களை அடுத்து குறித்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மகிழ்வான செய்தி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்! “இந்த ஆண்டுக்குள் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாள் சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். பதுளை, பண்டாரவளையில்…
சட்டத்திற்கு முரணாக இரத்தினக்கல் அகழ்வு- நால்வர் கைது
பலாங்கொடை பின்னவல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வளவ கங்கையில் சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதாகியவர்களிடம் இருந்து இரத்தினக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் மின்சார பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட நால்வரும் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில்…
முட்டையை விலை குறைப்புக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு
ஒரு முட்டையை பதினெட்டு ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும் என கூறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் ஹெட்டிபொல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளதாக அறியமுடிகிறது. சந்தையில் முட்டை விலை குறையும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகளும், நுகர்வோரும் முட்டையை…
இலங்கையில் மருந்துகள் பற்றாக்குறை
நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது. மருத்துவமனைகள் இன்னும் முக்கிய மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைப் பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அந்தக்…