நுவரெலியாவில் இதமான காலநிலை சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு.
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன. நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் துகள் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில் உஷ்ணமான காலநிலையும் , மாலை வேளையிலும்…
பல கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் மூவர் கைது
13 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் ice போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்திய மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (25) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் அவர்கள் கைது செ ய்யப்பட்டுள்ளனர்.…
திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து ரூ4.5 பில்லியனுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட படகுகளில் இருந்து 4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, 285 கிலோவுக்கும் அதிகளவான போதைப்பொருள், அவற்றில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவிலான குஷ் போதைப்பொருளை இலங்கைக்குக் கடத்தி வந்த இலங்கையர் ஒருவர் இன்று (25) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைதுசெய்துள்ளது. இரவு விடுதி ஒன்றில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகப் பணிபுரியும் 37 வயதுடையவரே…
நாட்டின் பல இடங்களில் பிற்பகலில் மழை பெய்யும் சாத்தியம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்…
கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம்
மகாவோயா – பெரகல வனப்பகுதியில் உள்ள ஓடை ஒன்றிற்கு அருகிலிருந்து, கழுத்துப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் வராபிட்டிய பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம்…
தற்போதைய அரசியல் நகர்வுகளை விமர்சித்த சாணக்கியன்
மறைந்த பெருந்தலைவர் இரா. சம்பந்தன், ஒரு காலத்தில் முன்வைத்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற நம்பிக்கை, தற்போதைய ஆட்சியின் கீழ் கேள்விக்குறியாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் அவர் கூறிய, தீபாவளிக்கு தீர்வு கிடைக்கும் போன்ற விடயங்களை…
அமெரிக்காவைத் தாக்கும் கடும் பனிப்புயல்
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை சூறையாடி வரும் கடும் பனிப்புயல் காரணமாக, நாடு முழுவதும் 84,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சார விநியோகத்தைக் கண்காணிக்கும் ‘PowerOutage.com’ இணையதளத்தின் தரவுகளின்படி, பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, டெக்சாஸ் மாநிலம் மிக…
ஆபிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிளவடைகிறது
ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான பிளவின் மூலம் மெதுவாக இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும், இதன் விளைவாக எதிர்காலத்தில் ஒரு புதிய சமுத்திரம் உருவாகும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகள் (Tectonic…
மினியாபோலிஸில் அமெரிக்க பிரஜை மீது துப்பாக்கிச் சூடு: நகர முதல்வர், ஆளுநர் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்கா – மினியாபோலிஸில் (Minneapolis) ஒருவரை அமெரிக்க மத்திய குடிவரவு அதிகாரிகள் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மினியாபோலிஸ் முதல்வர் ஜேக்கப் ஃப்ரே (Jacob Frey) மற்றும் மினசோட்டா ஆளுநர் டிம் வால்ஸ் (Tim Walz) ஆகியோர்…