கதிர்காமத்தில் அஸ்வெசும கொடுப்பனவு மோசடி
கதிர்காமம் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வழங்கப்பட்டதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கதிர்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் பயனாளி ஒருவருக்குச் சொந்தமான அஸ்வெசும கொடுப்பனவு நிதியை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில்…
வீழ்ச்சியை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (29) வீழ்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 91.22 புள்ளிகளால் (0.38%) வீழ்ச்சியடைந்து, 23,900.89 புள்ளிகளில் நிறைவடைந்தது. இன்றைய சந்தை வருவாய் 7 பில்லியன் ரூபாயாகும்.
நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள்
இலங்கையில் நாளொன்றுக்கு நூறு புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் சுமார் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக மருத்துவ நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பெப்ரவரி 4ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு…
இலங்கையில் தொழு நோயாளர்கள் மொரட்டுவவில் அதிகம் பாதிப்பு
இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, மொரட்டுவ பகுதியில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவான சிறுவர்கள்…
2026ஆம் ஆண்டு T20 உலகக்கிண்ணம் பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டது ICC
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி (ICC) ஆண்களுக்கான இருபதுக்கு 20 (T20) உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதான பயிற்சிப் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.அதன்படி,பெப்ரவரி 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கை மற்றும் இந்தியாவில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன.…
வீரசிங்கம், சித்தாறு அணைக்கட்டு வேலைகள் விரைவாக நடத்த – எம்.பி ரவிகரன் வலியுறுத்தல்
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கமநல சேவைநிலையப் பிரிவிலுள்ள, புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்புப் பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மற்றும் சித்தாறு அணைக்கட்டுக்களை அமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், குறித்த அணைக்கட்டுக்களின் வேலைத்திட்டங்களை…
இரத்தினக்கல், ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி குழு கலந்துரையாடல்
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் தொடர்பான பிரச்சினைகள் குறித்து அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் தலைமையில் மற்றும் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌஷல்யா ஆரியரத்ன,…
இளைஞர் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதை குறித்து உப குழு நடவடிக்கை
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக இளைஞர் தொழிமுயற்சியாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழு, பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ…
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில் வேன் ஒன்று கவிழ்ந்து விபத்து
ஹற்றன் – நுவரெலியா பிரதான வீதியில், திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்கிளயார் தோட்டத்திற்கு அருகில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . இன்று முற்பகல் 9.00 மணியளவில் சென்கிளயார் பகுதியிலிருந்து…
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோரை வரவேற்கும் இலங்கை
நாட்டில் நிலவிய உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக, முறையற்ற வகையில் வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் தாயகம் திரும்பும் போது, எவ்வித இடையூறுகளுமின்றி, நாட்டுக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதுள்ள குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் சில நிபந்தனைகளை மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பொதுமக்கள் பாதுகாப்பு…