மயக்க மாத்திரைகள் கொடுத்து கொள்ளை 28 வயதுடைய இளைஞர் கைது
மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளை அதிக அளவில் கொடுத்து, நபர்களை மயக்கமடையச் செய்து அவர்களின் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரை பொரலஸ்கமுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி, டிக்டொக் ஊடாகப் பழகிய தனியார்…
நிபா வைரஸ் இலங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்
இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் பரவல் குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு வருகைகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள்…
டிஜிட்டல் பொருளாதார கூட்டாண்மையை ஆழப்படுத்தும் இலங்கை – பாகிஸ்தான்
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றத்தில் ஒத்துழைக்க பாகிஸ்தானும் இலங்கையும் புதன்கிழமை (28) தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவை நிறுவின. கொழும்பில் நடைபெற்ற கூட்டுப் பொருளாதார ஆணையத்தின் (JEC) 13 ஆவது அமர்வின் போது, இருதரப்பு…
சிறுவர் பாதுகாப்பில் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிபரங்கள் வெளியீடு
2025 ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை…
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர்
இந்த ஆண்டு முதல் தரம் 6 இல் கல்வி பயிலும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் உள்வாங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டு வரை படிப்படியாக இந்தச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம்…
அமெரிக்க விண்வெளிப் படை – GPS III-9 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் வெற்றிகரமாக ஏவியது
டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அமெரிக்க விண்வெளி படைக்காக GPS III-9 என்ற மேம்பட்ட ஜி.பி.எஸ். செயற்கைக்கோளை ஏவியுள்ளது. புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனவரல் ஏவுதளத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம்…
மியன்மார் மாபியா கும்பலைச் சேர்ந்த 11 பேருக்குச் சீனாவில் தண்டனை
மியன்மாரின் எல்லை நகரமான லாவ்க்காங்கில் பாரிய மோசடி மையங்களை நடத்தி வந்த பிரபல மிங் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிங் குடும்பத்தினரின் மோசடி மற்றும் சூதாட்ட விடுதிகள் 2015…
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக ரோஹன் ஒலுகல நியமனம்
வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹன் ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தற்போதைய பதவிக்கு மேலதிகமாக, அவர் விசேட பணிக்குழுவுடன் இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் பொருந்தும் சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு மற்றும்…
கத்தோலிக்க பாதிரியார் மீதான தாக்குதல் சம்பவம் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பிணை
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (29)…
வாகன இறக்குமதிக்காக மேலும் $1.5 பில்லியனை செலவிடவுள்ள இலங்கை
2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை குறைந்து வரும் வேளையில், இந்த ஆண்டில் அதற்காக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட…