வரலாற்றில் இடம்பிடித்த மட்டு வைத்தியசாலை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், கரோட்டிட் எண்டார்டெரெக்டமி (Carotid Endarterectomy) அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வரலாற்றிலும், கிழக்கு மாகாணத்தின் வரலாற்றிலும் முதன்முறையாக குறித்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஒருவருக்கே குறித்த சிகிச்சை…

தீபாவளி தினம் இனி விடுமுறை பட்டியலில் இணைப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம், இனி விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக அம்மாகாண ஆளுநர் கவின் நியூசம் (Gavin Newsom) அறிவித்துள்ளார். இது இந்தியாவின் தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும்,…

ஆறு நாள்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஒக்டோபர் மாதத்தின் முதல் 6 நாட்களில் 34,046 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) கூற்றுப்படி, ஒரு நாளைக்கு சராசரியாக 5,299 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் (2024) முதல் ஆறு…

தோனியின் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி அதிகாரபூர்வமாக ட்ரோன் விமானி உரிமம் பெற்றுள்ளார். ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் தோனி அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட…

12 வருடங்களின் பின்னர் மலையகத்தில் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி தேசியப் பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய மலர்களான நீலக்குறிஞ்சிப் பூக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. 2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நீலம், ஊதா,…

வடக்கில் தனியார் கல்வி நிறுவனங்களை கண்காணிக்க விசேட ஏற்பாடுகள்

வடக்கிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டும் என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்கள் கற்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள் உரிய சுகாதார வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாக…

வடக்கில் லஞ்சீட்டுக்கு பதிலாக வாழை இலை

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் லஞ்சீட் பாவனைக்குத் தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றாத உள்ளூராட்சி மன்றங்கள் அதனை நிறைவேற்ற…

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர்…

ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்…

இந்தோனேசியா பாடசாலைக் கட்டட விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

இந்தோனேசியாவில் பாடசாலைக் கட்டடம் திடீரென இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலியான மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஜாவா மாகாணத்தின் சிடோர்ஜா நகரத்தில் உள்ள அல் கோசினி இஸ்லாமிய பாடசாலையின் கட்டடம், கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி திடீரென இடிந்து…

இலங்கை சினிமா